Author: Basidh Fareed
-

எண்ணங்களை என்ன செய்யலாம்?
எழுதலாம். ‘எண்ணங்களை என்ன செய்யலாம்’ என்ற தலைப்பை மட்டும் எழுதி விட்டே உள்ளடக்கத்துக்காக மூன்று மாதங்கள் காத்திருந்திருப்பேன். எதோ ஒன்று மூளைக்குள் வெளிச்சமடிக்கவே எழுதலாம் என தலைப்பிட்டிருந்தேன், கடைசியில் வெளிச்சம் போன குமிழ் மட்டும் தான் மிச்சமிருந்தது. இன்று மாலை பெரியதொரு சுமையை இறக்கிவிட்டு தண்ணீர் ஊற்றிய கணத்தில்தான் அடடா, இப்படியொரு கண்டன்ட் தலைப்போடு தவித்து நிற்கிறதே என்ற நினைப்பு வந்தது. தலையில் தண்ணியை ஊற்றிக்கொண்டு யோசித்தபோது தான் ‘எண்ணங்களை எழுதி விடலாமே’ என்ற யோசனை ஷம்புவுடன்…
-

பிக் பேங் எனும் பெருவெடிப்புக்கு சற்றே முன்பு…
அண்டம் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டது, பல புதிர்களையும் புல்லரிப்புகளையும் உள்ளடக்கியது. அவற்றுள் சில விடை அறியா புதிர்களுக்கு விஞ்ஞானிகள் சிலர் முன் வைக்கும் கோட்பாடுகள் விஞ்ஞானப் புனைகதைகளை விட சுவாரசியமானவை.அப்படிப்பட்ட ஒரு கோட்பாட்டை தான் நாம் இப்போது அலசப் போகிறோம். காலச் சக்கரத்தை சற்றே பின்னோக்கி சுழற்றி விடுவோம்; பூமி உருவாவதற்கு முன்பு, சூரியன் எரிவதற்கு முன்பு, விண்மீன் திரள்கள் தோன்றுவதற்கு முன்பு, ஒளி பிரகாசிக்கும் முன்பு, பெருவெடிப்பு (பிக்பேங்) ஏற்பட்டது. இது சுமார் 13.8…
-

அண்டம் பற்றிய இந்தத் தகவல்கள் தெரியுமா?!
01. சூரியனின் வயது துல்லியமாகச் சொன்னால், எமது ஞாயிற்றுக் குடும்பமானது 4.571 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. இன்னும் சுமார் 5 பில்லியன் ஆண்டுகளில், சூரியன் ஒரு சிவப்பு ராட்சத நட்சத்திரமாக விரிவடையும் என ஆய்வுகளின் முடிவில் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதிலிருந்து சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளில் விரிவடையும் சூரியனானது பூமியை முழுவதுமாக விழுங்கி ஏப்பம் விடும் என்றும் நம்பப்படுகின்றது. 02. சனிக்கு சந்திரன் சனியின் சிறிய சந்திரன்களில் ஒன்றான என்செலடஸ் (Enceladus) சூரியனின் ஒளியில் 90% ஒளியினைக்…
-

Journey Through, words – A short self story
It’s dark… dark… very dark… Why it’s this this much of dark??? ‘Cause I didn’t open my eyes yet… I am surrounded with the things, which I want, when open my eyes in the morning sunrise or evening sunset. A window with glass fittings, have some holes in glass for me, too drink the warm…
-

பாரிஸ் பருவ கால ஒப்பந்தம்
2021 ஜனவரி இல், ஐக்கிய அமெரிக்க குடியரசின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற கையோடு, அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட பிரகாரம், அமெரிக்காவானது மீண்டும் பாரிஸ் பருவ கால ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ளும் என உறுதி அளித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ‘பாரிஸ் பருவ கால ஒப்பந்தம் என்றால் என்ன? ‘ என்பதை அறியும் ஆர்வம் எம்மில் சிலரிற்கு ஏற்பட்டிருக்கலாம். அதைப்பற்றிய சிறிய ஒரு தொகுப்பு – தமிழில் இதோ… பாரிஸ் பருவ…
-

இறந்த உடல்களில் இருந்து வைரசுகள் பரவுமா?
2020 ம் வருடத்தை அறிமுகமில்லாத கொரோனாவுடன் ஆரம்பித்த நாம் 2021 ம் வருடத்தை அன்னியொன்னியமான கொரோனாவுடன் அடைந்திருக்கிறோம்.அந்த வகையில் சமகாலத்தில் கொரோனா வைரசு சம்பந்தமாக பெரிதும் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட விடயங்களில் ஒன்று தான், ‘இறந்த உடல்களில் இருந்து கொரோனா வைரசு பரவுமா?’ என்பதாகும். பொதுவாகவே, வைரசுகள் அனைத்தும், பெரும்பாலும் ஒரே மாதிரியான இயல்பையே காட்டுகின்றன. ஆனால் அவை பரவுகின்ற,உடலுக்குள் கடத்தப்படுகின்ற விதத்தில் தான் பெரும்பாலும் வித்தியாசப்படுகின்றன.அதாவது, சுவாசம் மூலம் கடத்தப்படுவன அல்லது இரத்தத்தின் மூலம் கடத்தப்படுவன போன்ற…